ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாலா கலந்து கொண்டாரா?… தெறிக்கவிடும் புகைப்படத்தினை வெளியிட்ட பாலா

by News Editor
0 comment

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். இருப்பினும் இந்த சீசனில் இரண்டாவது இடத்தினையும் பிடித்தார்.

இந்த சீசன் சுவாரசியமாக சென்றதற்கு பாலாஜியும் ஒரு முக்கிய காரணம் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் இருவருமே பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக தான் இருந்து வந்தார்கள்.

நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.

அதுமட்டும் இல்லாமல் இவர் முன்னின்று சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிருவி வருகிறார்.

அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார்.

ஆரியின் சமூக செயல்பாடுகள் குறித்து கமல் கூட பல முறை கூறியிருந்தார். அதே போல இறுதி போட்டியின் போது ஆரியை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்ட பாலாஜி.

பிக்பாஸ் முடிந்து வந்ததும் விவசாயம் செய்வேன் என்று கூறி இருந்தார். ஆரியை போன்று பாலாஜியும் ஜல்லிக்கட்டுவிற்காக போராடி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment