கராச்சி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

by News Editor
0 comment

கராச்சியில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் கடந்த 26-ந்தேதி தெடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 220 ரன்னில் சுருண்டது.

தொடக்க வீரர் டீன் எல்கர் அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, நௌமான் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 378 ரன்கள் குவித்தது. ஃபவாத் ஆலம் 109 ரன்களும், பஹீம் அஷ்ரப் 64 ரன்களும், அசார் அலி 51 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா, மகாராஜ் தலா 3 விக்கெட்டும், அன்ரிச் நோர்ஜோ, நிகிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் அணியை சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 245 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் மார்கிராம் 74 ரன்களும், வான் டெர் துஸ்சன் 64 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 40 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் நௌமான் அலி 5 விக்கெட்டும், யாசிர் ஷா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஒட்டுமொத்தமாக தென்ஆப்பிரிக்கா 87 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றதால் பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அசார் அலி ஆட்டமிழக்காமல் 31 ரன்களும், பாபர் அசாம் 30 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

Related Posts

Leave a Comment