பிரித்தானிய ராணியாரின் மெய்க்காப்பாளர்களில் முதல் கருப்பின உயரதிகாரி கைது: வெளியான பின்னணி

by News Editor
0 comment

பிரித்தானிய ராணியாரின் மெய்க்காப்பாளர்களில் உயரிய பதவியை எட்டிய முதல் கருப்பின ராணுவ அதிகாரி ஒருவர் வெடிமருந்துகளை திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய ராணியாரின் உயரடுக்கு மெய்க்காப்பாளர்களில் ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர் பதவியை எட்டிய முதல் கருப்பினத்தவரான ராணுவ வீரர் Kirtland Gill

வெடிமருந்துகளை திருடியதாக சிறப்பு அதிகாரிகளால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சார்ஜென்ட் மேஜர் கில் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜமைக்காவைச் சேர்ந்த எளிய மீனவரின் மகன் பிரித்தானியாவில் உயரிய பதவிக்கு அமர்த்தப்பட்டது கடந்த ஆண்டு தலைப்பு செய்திகளானது.

பல இராணுவ அதிகாரிகளாலும் சார்ஜென்ட் மேஜர் கில் அப்போது கொண்டாடப்பட்டார். தமது 20 ஆண்டு இராணுவ வாழ்க்கையில் சார்ஜென்ட் மேஜர் கில் இதுவரை இருமுறை பிரித்தானிய ராணியாரை நேரில் சந்தித்துள்ளார்.

தற்போது சார்ஜென்ட் மேஜர் கில் கைதாகியுள்ள தகவல், அவர் பணியாற்றிவரும் துருப்புகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ள 40 வயதான சார்ஜென்ட் மேஜர் கில், இந்த ஆண்டில் முக்கிய பொறுப்புக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று ராணுவ வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே சார்ஜென்ட் மேஜர் கில் கைதாகியுள்ளார். இவருடன் இன்னொரு ராணுவ வீரரும் கைதாகியுள்ளார்.

முழுமையான விசாரணைக்கு பின்னரே, இந்த வழக்கின் பின்னணி தெரிய வரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment