பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 28,680 பேர் பாதிப்பு

by Lankan Editor
0 comment

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 28ஆயிரத்து 680பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 239பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா விளங்குகிறது. மேலும், 37இலட்சத்து 43ஆயிரத்து 734பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து மூவாயிரத்து 126பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19,லட்சத்து 66ஆயிரத்து 672பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 937பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 73ஆயிரத்து 936பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Posts

Leave a Comment