63 வயதான முதியவருக்கு திருமணம்- திடீரென நடந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது

by News Editor
0 comment

குஜராத் மாநிலத்தில் 63 வயதுடையவர் திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் (63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே இவருடைய காலம் போனது. 63 வயதான நிலையிலும் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதன்படியே அவரை திருமணம் செய்து கொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயது பெண் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து, இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது லைலா திடீரென தரையில் மயங்கி சரிந்து விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் லைலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே லைலா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த 63 வயது கணவர் கதறி கதறி அழுதார்.

63 வயதில் கல்யாணுக்கு நடந்த திருமணத்தை எண்ணி மொத்த கிராமமும் உறவினர்களும் மகிழ்ச்சியில் மூழ்கினர். ஆனால், திருமணம் நடந்து முடிந்ததும் புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் தற்போது சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Posts

Leave a Comment