முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு செலுத்தப்பட்டது

by Lankan Editor
0 comment

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, முதலாவது தடுப்பூசி வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரமவிற்கு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment