வரும் செமஸ்டரிலும் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி கொடுக்கணும்! முதல்வரிடம் மாணவிகள் கோரிக்கை

by Lifestyle Editor
0 comment

சென்னை மெரீனா கடற்கரையில் 24 லட்சம் செலவில் உருவாக்கியுள்ள நம்ம சென்னை என்ற அடையாளத்துடன் கூடிய செல்பி மையத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். அதேபோல் மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் உள்ள எலக்ட்ரிக் மிதி வண்டி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை விரிவாக்கம் செய்யும் முறையில் கூடுதலாக எலக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 2ம் கட்டத்தில் ஆயிரம் எலக்ட்ரிக் மிதிவண்டி சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்ம சென்னை செல்பி மையம் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் முதலமைச்சருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அங்கிருந்த மாணவர்கள் உரையாடினர். அப்போது கடந்த செமஸ்டர் தேர்வின்போது அரியர் வைத்து பணம் கட்டிய மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அத்துடன் வரும் செமஸ்டரிலும் இதே போன்று தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக மாணவிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் கடந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட போது, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது. மாணவர்களின் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு இந்த அறிவிப்பை ரத்து செய்வதை ஏற்க மறுத்தது. இதனால் அரியர் மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Related Posts

Leave a Comment