‘பாலியல் வன்கொடுமையால் எச்.ஐ.வி பாதித்த சிறுமி

by Lifestyle Editor
0 comment

மதுரை அருகே 13 வயது சிறுமியை எச்.ஐ.வி பாதித்த வளர்ப்பு தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் கேரளாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, தனது வீட்டின் அருகே வசித்து வந்த ராணி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த ராணி, ராமமூர்த்தியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ராணியின் 13 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் சிறுமிக்கு உடல்நலம் சரியானதாக இல்லையாம். இதையடுத்து, அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்ததும், அவருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த தாய் ராணி, சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த ராமமூர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் ராமமூர்த்தியை அப்பகுதி போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரிந்தும், வளர்ப்பு தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment