ராதிகா சரத்குமார் திடீர் அறிவிப்பு!

by Lifestyle Editor
0 comment

கணவருடன் இணைந்து கட்சிப் பணியாற்றுவதற்காக, சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலகப் போவதாக ராதிகா சரத்குமார் அறிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமத்துவ மக்கள் கட்சி நடத்திய பரப்புரைக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய சரத் குமார், சமத்துவ மக்கள் கட்சி புரட்சியை செய்த இடத்தில் இருந்தே ஆலோசனை கூட்டத்தை தொடங்குகிறோம். 1996ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நம் கட்சி 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாட்டில் சாதிக்க உழைப்பும், நம்பிக்கையும் வேண்டும் என்று கூறினார். மேலும், பணம் கொடுத்தால் வாங்க வேண்டாம். ரசிகர்கள் ரசிகராக மட்டுமே இருக்க முடியும் என்றும் அரசியல்வாதியாக மாறினால் தான் மக்களுக்கு உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய ராதிகா சரத்குமார், தேர்தல் பணிக்காக இனிமேல் சீரியலில் இருந்து படிப்படியாக விலகி சரத்குமாருடன் இணைந்து முழு நேரமாக கட்சிப்பணியில் ஈடுபடப் போகிறேன் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சாதி, மதம் பார்க்காமல் எல்லாருடனும் பழகுவார் என்றும் கூறினார்.

Related Posts

Leave a Comment