காதலரை திருப்திப்படுத்த முடியவில்லை! காதல்தோல்விக்கு பிறகு புதிய காதலா? கமல் மகள் ஸ்ருதி கூறிய உண்மை

by News Editor
0 comment

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். தனுஷின் 3, சூர்யாவின் 7ஆம் அறிவு என அடுத்தடுத்த படங்களால் ஹிட் கொடுத்து பிரபலமானார் ஸ்ருதி. இதையடுத்து முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவிலும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார் ஸ்ருதிகாசன். அவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதும் தனிமையில் சந்திப்பது என கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருந்தார்.

அதன் காரணமாகவோ என்னவோ திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனை ஸ்ருதிஹாசனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் காதலை முறித்துக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் உண்மைக் காரணம் என்னவென்பதை சொல்லாமல் நீண்ட காலமாக மௌனம் காத்து வந்தார் ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலரை ஏன் பிரிந்தேன் என்ற காரணத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் ஸ்ருதி ஹாசன், காதலர் நினைத்த அளவுக்கு தன்னால் அவருக்கு திருப்தி கொடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். இரட்டை அர்த்தம் எதுவும் இல்லை. அவர் எதிர்பார்த்த அன்பையும் பாசத்தையும் என்னால் சரிவர கொடுக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காதல் முறிவுக்கு பிறகு நீண்ட நாட்கள் ஸ்ருதிஹாசன் ஒரே அறையில் தனிமையில் இருந்து வந்ததும், ஒருகட்டத்தில் தன்னைத்தானே மறக்கும் அளவுக்கு சென்றார் என்ற தகவலும் வெளியானது.

இதையடுத்து தற்போது ரசிகர்களுடன் இணையத்தில் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதி, காதல் பற்றி பதிலளித்துள்ளார். காதலித்து வருகிறீர்களா என்ற கேள்விக்கும், முன்னாள் காதல் பற்றியும் கேள்வி கேட்டதற்கு பதில் கொடுத்து புகைப்படத்தோடு ரீ ஆக்‌ஷன் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related Posts

Leave a Comment