பிக்பாஸ் பாலாஜியுடன் இருக்கும் உறவு இதுதான்! நடிகை யாஷிகா ஆனந்த் கூறிய உண்மை

by News Editor
0 comment

பிக்பாஸ் 4 சீசன் முடிந்து வெற்றியாளர் ஆரி ரூ. 50,00,000 பரிசு தொகையோடு டைட்டிலை கைப்பற்றினார். அவருக்கு அடுத்ததாக பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பாக அறியப்படாதவர் என்று இருந்த நிலையில் நடிகை யாஷிகாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களும் அதே தொலைக்காட்சி நடத்தி வந்த கனக்‌ஷன்ஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்று இருப்பதும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டில் இருக்கும் போது ரசிகர் ஒரு ‘பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா ? ஆனால், முருகதாஸ் நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை’ என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம்.

ஆனால், அவரை நினைத்து தற்போது நான் சந்தோசப்படுகிறேன். ஏனென்றால், இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் ஆசைப்பட்டார் என்பது தெரியும். ‘ இதன் மூலம் இவர்கள் இருவரும் தற்போது பேசுவது இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது.

Related Posts

Leave a Comment