சிறுமியின் மேலாடையை சரிசெய்த ராகுல் காந்தி: வைரலாகும் வீடியோ

by News Editor
0 comment

தமிழகத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்ட போது தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட பெண்ணின் மேலாடையை ராகுல் காந்தி சரிசெய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட பெண்ணை பிரச்சார வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்தார்.

அப்போது சிறுமி வாகனத்தில் ஏறுவதற்கு உதவி செய்ததுடன், ஏறும் போது அவரது மேலாடை விலக கணநேரத்தில் சரிசெய்தார்.

இந்த வீடியோ காட்சிகளை குமார் துரைசாமி என்பவர் பதிவிட்டதுடன், சிறுமியின் செல்பி ஆசையை நிறைவேற்ற வாகனத்தின் மீது தன்னிடம் அழைத்துக்கொண்டபோது சற்று விலகிய சிறுமியின் மேலாடையை கணநேரத்தில் சரிசெய்ததில் அடங்கியுள்ளது ராகுலின் உள்ளார்ந்த மனிதமும் , நிறைந்த அன்பும் , அக்கறையும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment