நடிகை வனிதா சினிமா துறையில் களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்த வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.
பின்பு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பீட்டர் பால் மதுவருந்திவிட்டு தகராறு செய்ததாகவும், தொடர்ந்து இதுவே நடைபெற்று வந்ததாகவும் கூறிய வனிதா அவரைவிட்டுப் பிரிந்தார்.
தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்த படமொன்றி இயக்க உள்ளார். அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளாராம்.
பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.