பைகாரா நதி மற்றும் நீர்வீழ்ச்சி

by Lifestyle Editor
0 comment

இம்மாவட்டத்திலேயே பெரிய ஆறு இதுதான். இந்தப் பகுதியின் பூர்வகுடிகளான தோடர் இனப் பழங்குடி மக்கள் இதைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். முக்குர்தியின் உச்சியிலிருந்து புறப்படும் இந்த பைகாரா ஆறு வடக்குப் பக்கமாகப் பரவி ஓடுகிறது. இந்தப் பகுதியின் முனையைத் தொடும் இடத்தில் மேற்காகத் திரும்புகிறது. இடையில் பல இடங்களில் அருவியாகக் கீழிறங்குகிறது. கடைசியாக இரண்டாகப் பிரிந்து விழும் இடத்துக்குத் தான் பைகாரா அருவிகள் என்று அழைக்கின்றனர். இதில் ஒன்று 55 மீட்டர் உயரத்தில் இருந்தும் இன்னொன்று 61 மீட்டர் உயரத்திலிருந்தும் வீழ்கின்றன. ஊட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த அருவிகள் இருக்கின்றன. பைகாரா அணைக்கட்டின் அருகில் அழகிய படகு இல்லம் ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது.

Related Posts

Leave a Comment