எம்ஜிஆர் சிலையில் அமமுக கொடி!

by Lifestyle Editor
0 comment

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தில் சசிகலா விடுதலையானதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக் கொடியை எம்ஜிஆர் பிடித்திருப்பது போல் சிலையில் அமமுகவினர் கொடியை வைத்துச் சென்றனர்.

மேலும் சசிகலா விடுதலையானதை வரவேற்கும் வகையில், சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மணிமண்டபம் எதிரில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அ.ம.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் சசிகலா விடுதலையானதை தொடர்ந்து விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 50க்கு மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சசிகலா விடுதலையை கொண்டாடும் விதமாக பழைய பேருந்து நிலையத்தில் அமமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து வேதாரண்யம் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா விடுதலையானதை கொண்டாடும் விதமாக தஞ்சை ரயில் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

சசிகலா விடுதலை ஆனதை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமமுகவினர் 50 மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சசிகலாவின் விடுதலை ஆனதையடுத்து கொடைக்கானல் அமமு கவினர், மூஞ்சிக்கல் பகுதியில் பட்டாசு வெடித்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலா நடராஜன் சிறையில் இருந்து வெளியானதையடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Posts

Leave a Comment