சாக்கோ சிப் குக்கீஸ் செய்வது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்

350 கி. வெண்ணெய்
350 கி. சர்க்கரை
6 முட்டை
150 கி. மாவு
50 கி. கோக்கோ பவுடர்
100 கி. சாக்லெட் சிப்ஸ்

செய்முறை

1. ஓவனை 160கு செல்சியஸுக்கு முன்கூட்டியே சூடுப்படுத்தவும். வெண்ணெய், சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அவை மிருதுவாகும் வரை அடிப்பதை நிறுத்த வேண்டாம். ஒரு முறைக்கு ஒரு முட்டை சேர்த்து, நன்றாக அடித்துக் கொள்ளவும்.
2. மாவு, கோக்கோ பவுடர், சாக் லெட் சிப்ஸ் ஆகியவற்றை இதில் நன்றாகக் கலக்கவும். இதை ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
3. இந்த மிக்சரில் சில ஸ்கூப்களை எடுத்து, பேக்கிங் டிரேவில் வைக்கவும். பின்னர் அதை 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஓவனில் வைத்துவிடுங்கள். ஒரு கிளாஸ் பாலுடன், இந்த குக்கீஸை சூடாகப் பரிமாறவும்.

Related Posts

Leave a Comment