ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியது சரிதான்… பிரெக்சிட் ஆதரவாளர்கள்!

by Lifestyle Editor
0 comment

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தது சரிதான் என்கிறார்கள், பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்த பிரித்தானியர்கள்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டுள்ள பிரெக்சிட் ஆதரவாளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தது சரிதான் என்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி போடுவது தாமதமாகியுள்ளதைத் தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களால் எரிச்சலடைந்துள்ள ஐரோப்பிய ஆணையம், தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த கோபம் ஒரு புறம் இருக்க, பிரித்தானியாவுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் கிடைக்க, தங்களுக்கு தாமதம் ஆவதால் ஐரோப்பிய ஆணைய தலைவர்கள் எரிச்சலடைந்துள்ளார்கள்.

பிரித்தானியா மீதான கோபத்தை அவர்கள் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் மீது காட்டத்துவங்கியுள்ளார்கள்.

ஐரோப்பிய சுகாதார ஆணையரான Stella Kyriakides, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தடுப்பூசியை வழங்க தவறியதற்காக விளக்கம் அளிக்க கோரியுள்ளார்.

இந்த வேடிக்கைகளை கவனித்துவரும் பிரெக்சிட் ஆதரவாளர்களோ, அதை ஒரு காரணமாக காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற பிரித்தானியா முடிவு செய்தது சரிதான் என்று கூறி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Related Posts

Leave a Comment