கர்ப்பிணிகளே! நெஞ்செரிச்சல் இருக்கா?

by Lifestyle Editor
0 comment

தர்பூசணி விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதைகளை தோல் நீக்கிய பின்பு, நன்கு வெய்யிலில் காய வைத்து பின் நெய்யில் வறுத்து, கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சாப்பிட்டு வந்தால், நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். சுமார் 30 கிராம் தர்பூசணி விதைகளில் உத்தேசமாக 158 கலோரி சக்தி உள்ளன. 30 கிராம் எடையில் சுமார் 400 விதைகள் இருக்கும் என்பதால் இதை தேவைக்கேற்ப சாப்பிட்டு வரலாம்.

கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு சட்டென்ற நினைவுக்கு வருவது தர்பூசணி பலம் தான். கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும் தாகத்தை தணிக்கவும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. குளிர்ச்சி தரும் பழவகைகள், இளநீர், பதநீர், தயிர், மோர் என பல இருந்தாலும், பார்த்த இடத்தில் எல்லாம் எளிதாக கிடைப்பது தர்பூசணிப் பழம் மட்டும் தான்.

மற்ற பழங்களில் எல்லாம் நீர்ச்சத்து என்பது முப்பது சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தர்பூசணி பழத்தில் மட்டும் தான் 90 சதவிகிதம் வரை நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மீதம் உள்ளதில் ஐந்து சதவிகிதம் விதைகளும் ஐந்து சதவிகிதம் தோலும் உள்ளன. இதனால் தான் கிராமப்புறங்களில் இப்பழத்தை தண்ணீர் பழம் என்றழைக்கின்றனர்.

தர்பூசணி

நம்மில் பெரும்பாலானவர்கள், தர்பூசணிப் பழத்தை வாங்கினால், பழத்தை உண்டுவிட்டு, அதில் உள்ள விதைகளை தூக்கி தூற வீசிவிடுகின்றனர். காரணம் தர்பூசணிப் பழத்தின் விதைகளின் நிறமும், அதன் வாசனையும் தான். இதனால் தான் சிலர் தர்பூசணி பழத்தையே அறுவறுப்பாக பார்க்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த விதைகளில் தான் நம்முடைய ஆரோக்கியத்துக்கு உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்கும் தெரியாது.

என்னென்ன சத்துக்கள்

தர்பூசணி விதையில் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதைகளை தோல் நீக்கிய பின்பு, நன்கு வெய்யிலில் காய வைத்து பின் நெய்யில் வறுத்து, கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சாப்பிட்டு வந்தால், நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். சுமார் 30 கிராம் தர்பூசணி விதைகளில் உத்தேசமாக 158 கலோரி சக்தி உள்ளன. 30 கிராம் எடையில் சுமார் 400 விதைகள் இருக்கும் என்பதால் இதை தேவைக்கேற்ப சாப்பிட்டு வரலாம். அதோடு, ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதைகளில் சுமார் 21 மில்லி கிராம் மெக்னீசியம் சத்துக்களும் அர்ஜினைன் என்னும் வேதிப்பொருளும் அடங்கயுள்ளன.

இரும்பு சத்து அதிகம்

நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் மெக்னீசியம் முக்கிய பங்காற்றுவதோடு, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. தர்பூசணி விதைகளில் 0.29 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோக்ளோபினுக்கு இரும்புச் சத்து முக்கிய காரணியாக உள்ளது. இரும்புச் சத்தானது நமது உடம்பில் உள்ள கலோரிகளை ஆக்க சக்திகளாக மாற்றி அவற்றை பயன்படுத்துகிறது. இதயம் பலவீனமானவர்கள் தர்பூசணி விதைகளை நீரில் நன்கு கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் இதயம் பலமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணிகளுக்கு அவசியம்

வைட்டமின் பி-9 ஆகியவை மூளையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தர்பூசணி விதைகளில் அதிக அளவில் உள்ளன. இது சாதாரண மக்களைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான ஒன்றாகும். நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் ஒரு தர்பூசணி விதையை சிறு துண்டுகளாக்கி சாப்பிட்டால் நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். தர்பூசணி விதைகளை வெய்யிலில் காயவைத்து வறுத்து சாப்பிடலாம். மேலும் தர்பூசணி விதைகளோடு, சிறிது வெல்லம் சேர்த்து தர்பீஸ் பர்பி செய்து சாப்பிடலாம்.

கண் பிரச்சினை தீரும்

கண் அழுத்த நோய் உள்ளவர்கள், மாலைக்கண் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து தர்பூசணி பழத்தையும், விதைகளையும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடுகள் நீங்கும். தர்பூசணி விதையில் உள்ள அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமிலோ அமிலங்கள், வலிமையான எலும்பு மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது மனித உடலின் சீரான செயல்பாட்டுக்கு உதவுவதோடு எலும்புகள் மற்றும் திசுக்களின் வலிமையை அதிகப்படுத்துகிறது. மேலும் இதில், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் பி6, நியாசின், ஃபோலேட், தயமின் போன்ற சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. இது நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Related Posts

Leave a Comment