தேனீர் தயாரிக்க பயன்படும் டீ பேக்குகளை உடலின் இந்த இடத்தில் வையுங்கள்! பின்னர் நடக்கும் அற்புதத்தை பாருங்கள்

by Lifestyle Editor
0 comment

டீ பேக்குகளை கொண்டு தேனீர் தயாரிக்கப்படுகிறது.

இதை வைத்து சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

கிரீன் டீ பேக்கை கொண்டு தேநீர் தயாரித்த பிறகு அந்த டீ பேக்கை மிதமான சூட்டில் கண்களில் வைக்கலாம். அல்லது டீ பேக்கை குளிர்சாதன பெட்டியில் குளிரவைத்துவிட்டு அதனை கண்களில் வைக்கலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறையும். கருவளையங்களும் மறைய தொடங்கிவிடும்.

கிரீன் டீ பருகிய பிறகு டீ பேக்கை சருமத்திற்கு உபயோகப்படுத்தலாம். அது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது. டீ பேக்கை கத்தரித்துவிட்டு அதில் இருக்கும் துகள்களை ‘பேஸ் பேக்’ தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம்.

அதனை சருமத்தில் தடவுவது இயற்கையாகவே பிரகாசத்தை ஏற் படுத்தி கொடுக்கும். வயதான தோற்றம் தென்படுவதை தள்ளிப்போட வைக்கும். குளியல் நீரில் டீ பேக்குகளை சில நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு குளிக்கலாம். அது உடலுக்கு இதமளிக்கும்.

பயன்படுத்தப்படாத டீ பேக்குகளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தலாம். ஆழமான சரும சுத்திகரிப்புக்கு நீராவி சிறந்தது.

நீராவியில் டீ பேக்குகளை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு சருமத்தில் தடவலாம். அது சரும துளைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவும். டீ பேக்குகளை வெந்நீரில் கலந்து வடிகட்டி தலைமுடியை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment