சுந்தர் பிச்சை வெல்கம்ஸ் இங்கிலாந்து பிளேயர்ஸ்!

by Lifestyle Editor
0 comment

இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட சென்னை வந்த இங்கிலாந்து வீரர்களை வரவேற்று கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ட்வீட் செய்துள்ளார்.

சில நாட்களாகவே கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தானொரு தீவிர கிரிக்கெட் ரசிகன் என்பதை உலகிற்கு உணர்த்திவருகிறார். கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் ஜூலை மாதம் தொடங்கியவுடன் உற்சாகத்தில் “கிரிக்கெட் இஸ் பேக்” என்று ட்வீட் செய்திருந்தார்.

அதன்பின் ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சம்பவம் செய்த இந்தியாவுக்கு அவர் வாழ்த்து கூறியிருந்தார். இச்சூழலில் தற்போது சென்னை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில், “என்னுடைய சொந்த மண்ணுக்கு வந்திறங்குய அனைவரையும் வரவேற்கிறேன். உங்களின் ஆட்டம் நிச்சயம் இத்தொடரை சிறப்பாக்கும் என்று நம்புகிறேன். அதற்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலாவதாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

Related Posts

Leave a Comment