கோயில் நிலங்களை அபகரித்தது திமுக

by Lifestyle Editor
0 comment

வழிபாட்டு ஸ்தலங்களில் சமஸ்கிருதம் கூடாது என்று கூற எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத திமுகவினருக்கு என்ன உரிமை உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் நடந்த குடியரசு தினவிழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “அனைத்து கோவில்களிலும் தமிழில் அபிஷேகம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழில் வழிபட தடை ஏதும் கிடையாது. சமஸ்கிருதம் கூடாது என்று சொல்வதற்கு எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லை என்று சொல்ல கூடிய திமுகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை, கோயில் நிலங்களை அபகரித்தது திமுக, 2000 ஏக்கர் நிலங்களை மீட்டது அதிமுக அரசு, தமிழ்நாட்டு அரசியலை குற்றம் சொல்ல வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார்.

ஒரு வருடத்திற்கு முன்பு கோரிக்கை மனுக்கள் என்ற பெயரில் ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை கொண்டுவந்து தலைமைச் செயலரிடம் திமுக மூத்த நிர்வாகிகள் கொடுத்தனர். அதில் பெருவாரியான கோரிக்கைகளை அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டு விட்டது. தற்போது மக்களை ஏமாற்றும் விதமாக திமுகவினர் பயணம் மேற்கொண்டு வருகின்றர். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக தான் இந்த நாடகம், கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணத்தில் திமுகவினர் செயல்படவில்லை” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment