சாக்கலெட் கேக்

by Lifestyle Editor
0 comment

தேவையானவை:

100 கி. வெண்ணெய்
100 கி. அரை இனிப்பு சாக்லெட்
120 கி. சர்க்கரை
3 முட்டையின் மஞ்சள் கரு
1 தேக்கரண்டி காஃபி
75 கி. பாதாம் பொடி
3 முட்டை வெள்ளைக் கரு

செய்முறை

1 ஓவனை 180° செல்சியஸுக்கு முன்கூட்டியே சூடுப்படுத்திக் கொள்ளவும். வெண்ணெய், சாக் லெட்டை ஒன்றாக உருக்கவும். பின் அதை தனியாக வைத்து விடவும்.
2 பாதியளவு சர்க்கரையை மஞ்சள் கருவுடன் சேர்த்து அடித்துக் கொள்ளவும். அது வெளுத்த நிறத்தில் கிரீம் போல ஆனவுடன், அதை சர்க்கரை கலவையுடன் கலக்கவும். காஃபி, பாதாம் பொடியைக் கொட்டி நன்றாகக் கலக்கவும்.
3 மீதமுள்ள சர்க்கரையை வெள்ளைக் கருவுடன் கலந்து, நன்றாக அடித்து, அவை திடமாக ஆனவுடன், சாக்லெட் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.
4 ஒரு 8”x 8” டிரேயில் இதைக் கலந்து, முன்னரே சூடுபடுத்திய ஓவனில் 30 முதல் 40 நிமிடங்கள் வைக்கவும். ஐஸ்கிரீமுடன் சூடாகப் பரிமாறவும்.

Related Posts

Leave a Comment