பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி… பயங்கர திகில் காட்சி

by Lifestyle Editor
0 comment

பனிச்சறுக்கு வீரர் ஒருவரை கரடி ஒன்று விடாமல் துரத்திச்செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ருமேனியா நாட்டில் உள்ள Predeal ski resort என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக வந்த கரடி ஒன்று அந்த இளைஞரை துரத்த தொடங்கியுள்ளது.

கரடி தன்னை துரத்துவதை அறிந்த அந்த இளைஞர் முன்பைவிட வேகமாக செயல்பட்டு அந்த கரடியிடம் இருந்து தப்பிக்கிறார்.

இந்த சம்பவம் அங்கிருந்த மற்றொரு பனிச்சறுக்கு வீரரால் படமாக்கப்பட்டு, தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment