பிரித்தானியாவில் 15 வயது சிறுவனை கொடூரமாக கொன்ற கோடீஸ்வரரின் 19 வயது மகன்! ஓரினச்சேர்க்கை பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியாவில் 15 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கோடீஸ்வரரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையானது கடந்த 2019ஆம் ஆண்டு நடந்துள்ளது.

அந்த ஆண்டின் டிசம்பர் 13ஆம் திகதி அன்று Alex Rodda (15) என்ற சிறுவனின் அரை நிர்வாண சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அவன் கொலை குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன்படி கோடீஸ்வரர் ஒருவரின் மகனான Matthew Mason (19) என்பவரும் Alexம் நண்பர்களாவார்கள்.

இருவரும் ஓரினச்சேர்க்கையில் அடிக்கடி ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் Matthew வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

இதையறிந்த Alex, அந்த பெண்ணிடம் நீயும் நானும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை கூறப்போகிறேன் என Matthew-வை மிரட்டியுள்ளார். இதையடுத்து Alexஐ ஓரினச்சேர்க்கையில் ஈடுபடவேண்டும் என Matthew அழைத்துள்ளார்.

பின்னர் தனியான இடத்துக்கு இருவரும் சென்ற நிலையில் தன்னிடம் இருந்த இரும்பு ஸ்பேனரை வைத்து சரமாரியாக தலையில் தாக்கி சிறுவன் Alex-ஐ Matthew கொடூரமாக கொலை செய்துள்ளார் என தெரியவந்தது.

தனது நண்பர்களுக்கும், காதலிக்கும் தனது ஓரினச்சேர்க்கை பழக்கம் தெரிந்துவிடுமோ என பயந்தே இந்த கொலையை அவர் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் Matthewவை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு Chester Crown நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் Matthew மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறைந்தபட்சம் அவர் 28 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நீதிபதி கூறுகையில், இது திட்டமிட்ட கொலை. Matthewவாகிய நீங்கள் இரக்கமின்றி உங்களால் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதமான பச்சாதாபத்தையும் காட்டவில்லை, இது மன்னிக்க முடியாத குற்றம் என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment