உலகளவில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்துஇ பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 69 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 7 கோடியே 22 இலட்சத்து 89 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 கோடியே 58 இலட்சத்து 48 ஆயிரத்து 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தொற்றுக்கு உள்ளான 21 இலட்சத்து 49 ஆயிரத்து 387 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.