இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது.
மேலும், குடியரசு தின நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதன்போது எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் தேசியக் கொடியுடன் வானில் பறந்தது.
இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து இராணுவத்தின் உயரிய விருதுகளை வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர்.