தினமும் 20,000 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

by Lankan Editor
0 comment

நாளாந்தம் சுமார் 20,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நாளொன்றில் 10,000 PCR பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 40 வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
5 தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, கேகாலை மற்றும் களுத்துறை வைத்தியசாலைகளில் PCR பரிசோதனை கூடத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சே​வைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment