சீஸ் கேக்

by Lifestyle Editor
0 comment

தேவையானவை:

200 கி. பனீர்
100 கி. ஐசிங் சர்க்கரை
200 கி. மாஸ்கர்போன் சீஸ் (கிரீம் சீஸையும் பயன்படுத்தலாம்)
12 கி. சோள மாவு
1 தேக்கரண்டி மாவு
1லு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
80 மி.லி. கிரீம்
200 கி. புளூபெரி ஜாம் அல்லது பேஸ்ட்

செய்முறை

1 பனீர், ஐசிங் சர்க்கரை சேர்த்து கிரீமாக்கவும்.
2 மஸ்கார்போன் சீஸை சோள மாவு, வெண்னிலா எசன்ஸுடன் சேர்த்து மெதுவாக அடிக்கவும். அது மென்மையான கிரீம் போல ஆகும் வரை இப்படி செய்யவும். பனீர் கலவையுடன் சேர்க்கவும்.
3 கிரீமை லேசாகக் கலந்து, கலவையுடன் சேர்க்கவும்.
4 ஒரு லூஸ் பாட்டம் மோல்டில் ஊற்றி, 160மு சென்டிகிரேட் வெப்பநிலையில் ஒரு மணி நேரம் பேக் செய்யவும்.
5 சீஸ் கேக்கின் மேல் புளூபெர்ரி ஜாம் அல்லது பேஸ்ட்டை ஊற்றுவதற்கு முன்பு, அது குளிர்வடைய ஒரு மணி நேரம் காத்திருக்கவும்.
6 அதை வெளியே எடுத்து ஸ்லைஸாக வெட்டுவதற்கு முன்பு சில மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்திருக்கவும். சூடான காஃபியுடன் பரிமாறவும்.

Related Posts

Leave a Comment