பிரசவ காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

by Lifestyle Editor
0 comment

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் எவ்வாறு இருக்க வேண்டும்? எந்த மாதிரியாக தூங்க வேண்டும் என்பதை தற்போது காணலாம்.

கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கம் வராது.

குழந்தை வளர வளர வயிற்று குடல் ஒரு பக்கம் தள்ளும் இதனால் அதிகம் சாப்பிட முடியாது, சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள், போன்றவற்றை பல வேலைகளாக பிரித்து சாப்பிட வேண்டும்.

பிரசவ காலத்திற்கு பின் உடற் பயிற்சி செய்ய வேண்டும் அது வயிற்று தசைகளை வலுபெற செய்யும். கர்ப்பிணிகள் தினம் ஒரு வாழை பழம் சேர்த்து கொள்ளலாம். இது உடல் சூட்டை தணிக்கும், மலசிக்கல் வராமால் தடுக்கிறது.

கர்ப்பகாலத்தில் அதிகம் தண்ணீர் குடித்தால் கால் வீங்கும் என்பது தவறானது. கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மலசிக்கல் தடுக்கப்படும்.

பிரசவம் முடிந்தவுடன் வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக துணியை வயிற்றில் கட்டகூடாது. பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து அதற்க்கான பெல்ட்டை அணியலாம்.

கர்ப்பகாலத்தில் சிலர்க்கு சுகர், தைராய்டு, இரத்தழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் அதற்க்கான மருந்துகளை கட்டாயம் எடுத்தக்கொள்ள வேண்டும். அது குழந்தையை பாதிக்காது.

Related Posts

Leave a Comment