யாழ் .மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவு கோரல்

by Lankan Editor
0 comment

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரப்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய அவர்கள் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment