உலகளவில் 10 கோடியை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள்

by Lankan Editor
0 comment

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாரியதாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் இதுவரை காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 9.97 கோடியைக் கடந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21.37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,ரஷ்யா,பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

Related Posts

Leave a Comment