அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5பேர் பலி

by Lankan Editor
0 comment

அமெரிக்காவில் இண்டியானாபோலிஸ் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

நகரின் வடகிழக்கு பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டினால் பலத்த காயத்துக்குள்ளாகியிருந்த கர்ப்பிணிப்பெண், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி உயிர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் நம்புகின்றனர்.

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இது பெரும் படுகொலை என மாநகர மேயர் ஜோ ஹாக்செட் விபரித்துள்ளார்

Related Posts

Leave a Comment