இலங்கையில் நேற்று மட்டும் 843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

by Lankan Editor
0 comment

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 783 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment