மேலும் சில பகுதிகள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

by Lankan Editor
0 comment

நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை-1 C, கல்முனை-1 E, கல்முனை- 2 கல்முனை- 2 A, கல்முனை 2 B, கல்முனை- 3A ஆகிய பகுதிகளும் கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை- 1 MD, மற்றும் கல்முனை குடி- 1, கல்முனை குடி-2, கல்முனை-3 MD ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஹம்பாந்தோட்டை- அம்பலாந்தொட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலக்கம் 140 பொலான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மல்கோனிய பகுதி இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment