மேல் மாகாணத்தில் O/L மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்று ஆரம்பம்

by Lankan Editor
0 comment

மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை இன்று ஆரம்பிப்பதற்காக சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டு இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் மேல் மாகாணத்தில் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

எனினும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்த தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற விசேட கண்காணிப்பின் மூலம் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித சிக்கலும் கிடையாது. மாணவர்கள் அச்சமின்றி பாடசாலைக்கு வந்து கற்றலை தொடரலாம். மேல் மாகாணத்தில் ஏனைய மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

Related Posts

Leave a Comment