தை மாத கிருத்திகை விரதம்

by Lifestyle Editor
0 comment

சிவனின் மைந்தன் முருகப்பெருமானை கார்த்திகை நாளில் விரதம் இருந்து வணங்கினால் நமக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறும். குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்கள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களுக்கு கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. திருமண தடைகள், நிலப்பிரச்சினைகள் தீரும்

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, உத்தராயண துவக்கமான தை மாத தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கிருத்திகை, தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.

கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணியில் இருந்தே விரதம் தொடங்குவது நல்லது. கிருத்திகை விரத நாளில் உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இரவில் உறங்காமல் செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை படித்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.

தை மாத கிருத்திகை அன்று பல முருகன் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தி வருகின்றனர். தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தை கிருத்திகையில் அழகன் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

Related Posts

Leave a Comment