சட்டமன்ற தேர்தலை மே.5ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டம்!

by Lifestyle Editor
0 comment

தமிழக சட்டமன்ற தேர்தலை வரும் மே 5 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மக்களும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையமும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து, தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 3.08 கோடி ஆண் வாக்காளர்களும், 3.18 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 7,246 வாக்காளர்களும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அதிகபட்சமாக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக சோழிநல்லூர் தொகுதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை முடிவு செய்ய வரும் பிப் 20 மற்றும் 21 ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் டிஜிபி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதில் சட்டமன்ற தேர்தல் மே 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அளிக்கும் தகவலின் படி அடுத்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment