மாயமான மலேசிய விமானத்திற்கு நேர்ந்தது என்ன? வெளிவரும் புதிய தகவல்

by Lifestyle Editor
0 comment

மாயமான மலேசிய விமானம் MH370 வானத்தில் பறக்கும்போதே சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என 7 ஆண்டுகள் நீண்ட விசாரணைகளுக்கு முடிவில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2014 மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் MH370 குறித்த தனது அதிர்ச்சி முடிவுகளை இன்று வெளிப்படுத்தியுள்ளார் புலனாய்வு பத்திரிகையாளரான Florence de Changy.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற அந்த விமானமானது, ஒரு மணி நேரத்திற்குள் தடம் மாறியதாகவும், பின்னர் இந்திய பெருங்கடலில் விழுந்ததாகவும் அரசு தரப்பு வெளியிட்டுள்ள தகவல்.

ஆனால் தாய்லாந்து வளைகுடாவில் மூழ்குவதற்கு முன்னர், அந்த விமானம் மேலும் சுமார் 80 நிமிடங்கள் வரை பறந்ததாகவும் பத்திரிகையாளர் புளோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியட்நாம் அருகே தாய்லாந்து வளைகுடா பகுதியில் வைத்து அந்த விமானம் ஏவுகணை அல்லது புதிய வகை ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இது விபத்தாக கூட இருக்கலாம் அல்லது திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றார் பத்திரிகையாளர் புளோரன்ஸ்.

மேலும், அந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான சரக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதை மலேசிய அரசு சாமர்த்தியமாக மூடி மறைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, குறித்த விமானம் வியட்நாம் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரியுள்ளதும்,

தொடர்ந்து தாங்கள் ஆபத்தில் இருப்பதாக அவசர சமிக்ஞை அனுப்பியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் கண்டறிந்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் என்றால், சமீப கால வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மிகப்பெரிய உண்மை இதுவாகவே இருக்கும் என்றார் பதக்கங்கள் பல வென்றுள்ள பிரான்ஸ் பத்திரிகையாளர் புளோரன்ஸ்.

Related Posts

Leave a Comment