தலைமுடி பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வெங்காயம்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க

by Lifestyle Editor
0 comment

இன்று பலரும் தலை முடி சார்ந்த பிரச்சினைகளை அதிகம் சந்தித்து வருகின்றார்கள். இதறகு முக்கிய காரணமே நமது வாழ்க்கை முறை தான்.

அப்படி தலைமுடி உதிர்வதற்கு முக்கியமானவை காற்று மாசுபாடு, தலை முடி வேர்களின் வறட்சி, அழுக்கு மற்றும் தூசிகள்தான்.

இவற்றை போக்க அழகுநிலையங்களுக்கோ, பணத்தை செலவழிக்க கூட தேவையில்லை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

அதில் வெங்காய் தலைமுடி பிரச்சினைக்கு பெரிதும் உதவியாக உள்ளது. தற்போது அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை
  • வெங்காயம் – 2 ஸ்பூன்
  • மயோனைஸ்- 3 ஸ்பூன்
  • தயிர் – 25 மில்லி
செய்முறை
  • வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
  • இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.
நன்மை

வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.

Related Posts

Leave a Comment