பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கேரளாவுக்கு சென்று சாமி தரிசனம் செய்த சோம்! உடம்பு சரியில்லாமல் இருந்தேன்…. தீயாய் பரவும் வீடியோ

by News Editor
0 comment

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளர் சோமசேகர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன்முறையாக பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே முடிந்ததும் கேரளாவுக்கு சென்றுள்ள சோமசேகர், குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தற்போது, குருவாயூரில் இருந்து தனது ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் முதன் முறையாக பேசி போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இறுதி வரை என்னை எவிக்ட் செய்யாமல் ஓட்டுப் போட்டு காப்பாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும், கிராண்ட் ஃபினாலே வாரத்திலும் எனக்காக வாக்களித்த ரசிகர்களுக்கும் ரொம்பவே நன்றி.

உங்க லவ் பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லை. கொஞ்ச நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தேன் இப்போ பரவாயில்லை. சீக்கிரமே லைவ் செஷனுக்கு வருகிறேன் என்றார்.

Related Posts

Leave a Comment