மணலியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது

by Lifestyle Editor
0 comment

சென்னை
மணலி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் குறிப்பிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின்போது மணலிபுதுநகர் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்றிருந்த 2 பெண்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் பிடித்து மணலிபுதுநகர் காவல்நிலையத்தில், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.
அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் விச்சூரை சேர்ந்த மகாலட்சுமி மறறும் ஜெயா என்பது தெரியவந்தது. மேலும், ஆந்திராவில் கஞ்சாவை கடத்திவந்து, எண்ணூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட இடங்களில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் 8 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

Related Posts

Leave a Comment