அவுஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பிய தமிழன் நடராஜனுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு வெளியானது

by Lifestyle Editor
0 comment

இந்திய அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு சென்றார்.

அங்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி சாதனைகள் படைத்த பின்னர் கடந்த வியாழக்கிழமை அவர் சொந்த ஊரான சின்னப்பம்பட்டி திரும்பினார்.

வெளிநாட்டில் இருந்து வந்ததால் அரசு விதிமுறைகளின்படி வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் நடராஜனுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியானது.

இதில், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment