முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்ட ஜேர்மன் மருத்துவமனை! புதிய நோயாளிகளுக்கு அனுமதி இல்லை..

by Lifestyle Editor
0 comment

பெர்லின் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 20 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட பி 117 வேரியண்ட் உருமாறிய கொரோனா வைரஸ் 70 தவிதம் அதிகம் பரவக்கூடியதாகவும், அதிகம் கொள்ளக்கூடியதாகவும் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ அநிபுணர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜேர்மன் தலைநகரான பெர்லினில் உள்ள Vivantes Humboldt மருத்துவமனையில் இருந்த 20 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் ன்பதிக்கப்பட்டதையடுத்து, ஜெர்மன் சுகாதார அதிகாரிகள் அந்த மருத்துவமனையை முழுவதுமாக தனிமைப்படுத்தியுள்ளனர்.

அங்கிருந்த பலளுக்கும் அடுத்தடுத்து பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நோயாளிகள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.

புதிய நோயாளிகள் மற்றும் அவசர வழக்குகள் மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பி விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருத்துவமனை ஊழியர்கள் shuttle quarantine செய்யப்பட்டுள்ளனர். அதாவது அவர்கள் வீடுகளுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Posts

Leave a Comment