அடேங்கப்பா.. ஒரே ஆண்டில் 12 பிள்ளைகள்.. 27 மனைவியா? தந்தையை பற்றி மகன் வெளியிட்ட வீடியோ!

by News Editor
0 comment

கனடா நாட்டில் உள்ள கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வசிப்பவர் வின்ஸ்டன் பிளாக்மோர்(64).

இவருக்கு, 27 மனைவிகள், 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவின் பெரிய குடும்பமாக கருதப்படுகிறது.

இதுவரை, இவரிம் வெளி உலகுக்கு தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பத்தை பற்றி மகனான மெர்லின் பிளாக்மோர் (19) டிக்டாக் வீடியோவின் மூலம் அம்பலபடுத்தியுள்ளார்.

அதில், அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் “mum” என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை “Mother” என அழைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும தெரிவித்துள்ளார்.

பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பாசமாக வளர்ந்து வருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதை அனைத்தையும் விட மிகுந்த சுவாரஸ்யமான தகவலாக தனது அப்பா வின்ஸ்டன் பிளாக்மோர் திருமணம் செய்த 27 பெண்களில், அக்கா – தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்துள்ளார்.

ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் 12 பேருக்குமே “M” என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரிய குடும்பம் என்பதால் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே தோட்டம் அமைத்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் அனைவரும் ஒன்றுக்கூடி வேலை செய்வோம் எனவும் தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment