திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லை! மனைவி மேற்கொண்ட காரியம்.. வெளியூரில் இருந்து திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லாத நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பீகாரை சேர்ந்தவர் ஷர்தா குமாரி. இவருக்கும் பிரமோத் என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை, குமாரி காவல்துறையில் பணிபுரிந்து வந்தார்.

பிரமோத் ஒடிசாவில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.

இதன் காரணமாக குமாரி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். பிரமோத் ஒடிசாவிலேயே தங்கியிருந்த நிலையில் அவ்வபோது வந்து மனைவியை பார்த்து செல்வார்.

அப்படி இரு தினங்களுக்கு முன்னர் மனைவியை பார்க்க பிரமோத் வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் வீட்டு உரிமையாளர் உதவியுடன் கதவை பிரமோத் திறந்து உள்ளே சென்ற போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்குள்ள அறையில் குமாரி தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் குமாரி சடலத்தை கைப்பற்றினர்.

மேலும் அவரின் டைரியையும் கைப்பற்றினார்கள்.

விசாரணையில் குமாரி சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததும் அதன் காரணமாக தன்னை மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு கணவரிடம் கேட்டதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Comment