அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர்

by Lifestyle Editor
0 comment

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வரும் 27 ஆம் தேதி அவர் விடுதலை ஆக இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்து அவர் தமிழகம் திரும்பினால் அதிமுக உடையும் என்றும், இரட்டை இலை சின்னம் முடங்கும் என்றும் அதனால் கவர்னர் ஆட்சி வரும் என்றெல்லாம் பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் இது எதுவும் நடக்காது. சசிகலா அப்படி எதுவும் செய்ய மாட்டார் என்கிறார் பாஜக மூத்த தலைவர் இல கணேசன்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த இல கணேசன் செய்தியாளர்களை சந்தித்த போது சசிகலா விவகாரம் குறித்து பேசினார்.

அவர், ’’சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவதை சிங்கம் புலி கரடி கூண்டிலிருந்து திறந்துகொண்டு வெளியே வருவதைப் போல ஏன் சித்தரிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை’’என்றார்.

மேல்ம், ‘’சசிகலா ஜெயலலிதா மீது அதிக விசுவாசம் கொண்டவர். அவர்களுக்குள் ஆயிரம் இருந்தாலும் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே நட்பு இருந்தது. அது ஈடு செய்ய முடியாத அளவு சிறப்பானது. திமுக என்ற கட்சி இன்றைக்கு ஜெயலலிதா நினைவாக இருக்கும் கட்சி. அப்படியிருக்கையில் அந்த கட்சிக்கும் அந்த கட்சியின் இரட்டை இலை சின்னத்துக்கு யாரும் துரோகம் செய்ய நினைத்தாலும் அது ஜெயலிதாவுக்கு செய்யும் துரோகம் தான்.

எனக்குத் தெரிந்த இந்த விஷயம் சசிகலாவுக்கு மட்டும் தெரியாமல் போகுமா என்ன. அவருக்கும் தெரியும். அவர் நிச்சயம் துரோகம் செய்ய மாட்டார். ஆனால் அவர் துரோகம் செய்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. அதனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். முதலில் சசிகலா வெளியே வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எல்லாம் நல்லதே நடக்கும்’’ என்றார்

இல.கணேசனின் இந்தப் பேச்சு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts

Leave a Comment