வெப் வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ், வீடியோ கால் வசதி !

by Lifestyle Editor
0 comment

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக மக்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பயனர்களின் தனியுரிமை விவகாரம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தது. ஆனால், வாட்ஸ்அப் செயலி பயனர் தனியுரிமை கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்த உடன் பலர் எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ் அப் செயலியில் இருந்து வெளியேறினர்.

வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு மாறியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பல விளக்கங்களை அளித்திருந்தது. பயனர்களின் தங்களது சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும், பயனர்களின் குழு விவரங்களை பகிர்ந்து கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்தது.

இந்த நிலையில், பயனர்களை கவரும் விதமாக வாட்ஸ் அப் செயலி புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப் செயலியின் வெப் வாட்ஸ் அப் வசதியிலும் வீடியோ கால் மற்றும் போன் செய்யும் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த வசதியை இதர செயலிகள் அறிமுகம் செய்யாத நிலையில், வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனியுரிமை கொள்கைகளால் ஏற்பட்ட சர்ச்சைகளைக் கடந்து வாட்ஸ் அப் பயனர்களை ஈர்க்க உள்ளது. இது தொடர்பான சோதனைகளை வாட்ஸ் அப் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதியை அறிமுகம் செய்வதன் மூலம் புதிய பயனர்களையும் வாட்ஸ் அப் ஈர்க்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ள டெக்ஸ்டாப்களில் இந்த வசதி கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

Related Posts

Leave a Comment