தந்தையின் தலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு, நண்பரின் குடலை வெட்டி மாலையாக போட்டுக்கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட நிர்வாணமாக நடந்து வந்த ஒருவர், சாவகாசமாக வீட்டு வாசலில் உட்கார்ந்து சிகரெட் ஒன்றை பற்றவைத்ததைக் கண்ட பக்கத்துவீட்டுக்காரருக்கு பயத்தில் இதயமே நின்று விடும்போலிருந்தது. இந்த அதி பயங்கர சம்பவம் நடந்தது உக்ரைன் நாட்டில்.
Dmitry Ponomarenko (30) என்னும் அந்த நபர், தன் தந்தையான Igor Ponomarenko (53)வின் தலையுடன் வந்ததைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளார்.
அவசர உதவிக்குழுவினருடன் விரைந்து வந்த பொலிசார் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கு Igorஇன் தலையற்ற உடல் கட்டிலில் கிடக்க, குடும்ப நண்பரான Igor (32) என்பவரின் உடல் கீறப்பட்டு குடல்கள் அகற்றப்பட்டுக் கிடந்துள்ளது.
ஏன் இப்படி கொலை செய்தாய் என்று Dmitryயை கேட்டதற்கு, ‘நான் கடவுள், எனக்கு அவர்களை பலிகொடுத்தேன்’ என்று பதில் சொல்லியுள்ளார் Dmitry. கைது செய்யப்பட்ட Dmitry சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இரட்டைக் கொலைக்காக அவர் 15 ஆண்டுகள் சிறையிலடைக்கப்படலாம்.