டிக் டாக் மோகம்: நண்பர்கள் கண்முன்னே 18 வயது இளைஞனுக்கு நடந்த பரிதாபம்!

by Lifestyle Editor
0 comment

பாக்கிஸ்தானில் டிக் டாக் வீடியோவிற்காக தண்டவாளத்தில் நடந்து சென்ற இளைஞன் நண்பர்கள் கண்முன்னே ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டி நகரின் ஷா காலித் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு கோரமான விபத்து நடந்தது.

18 வயதான ஹம்ஸா நவீத் டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவதற்காக, ரெயில் தண்டவாளத்தின் மீது நடந்தபடி, நபர்களின் உதவியுடன் மொபைல் போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

அவரும் அவரது நண்பர்களும் கவனிக்காத நிலையில், அந்த நேரம்பார்த்து எதிர்பாராத விதமாக, வேகமாக வந்த ஒரு ரெயில் மோதியதில் ஹம்ஸா நவீத் தூக்கி வீசப்பட்டார்.

மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர், ஆனால் ஆனால் அந்த இளைஞன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது விபத்து தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

மற்ற நாடுகளைப் போலவே, பல இளைஞர்களும் தங்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் டிக் டாக் கணக்குகளைப் புதுப்பிக்க, செல்பி எடுப்பது மற்றும் சமூக ஊடகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவது பாக்கிஸ்தானிலும் மிகவும் பிரபலமாக உள்ளது. இதனால் அவ்வப்போது இதுபோன்ற பரிதாப சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

Related Posts

Leave a Comment