மகளையே திருமணம் செய்துக் கொள்ள துணிந்த தந்தை

by Lifestyle Editor
0 comment

திருச்சி அருகே மகளை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி விமான நிலையம் பகுதியில் வசித்து வருபவர் ராணி. இவரது முதல் கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இறந்த நிலையில், இவருக்கு 2 மகள்களும் 2 மகன்களும் இருக்கின்றனர். 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக தவித்து வந்த ராணி, கணவன் இறந்து சில ஆண்டுகள் கழித்து வெங்கடேஷ் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், ராணியின் முதல் கணவர் மகள் மீது வெங்கடேஷ் ஆசைப்பட்டிருக்கிறார். அந்த இளம்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ராணியிடம் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்துள்ளார். இதற்கு ராணியும் அவரது மகன்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வெங்கடேஷ் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு அந்த இளம்பெண்ணை தாக்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ராணி வெங்கடேஷ் மீது அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். வெங்கடேசனால் தாக்கப்பட்ட ராணியின் மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகள் முறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணை வெங்கடேஷ் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment